ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில், 3,000 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்த, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக, முதல்கட்டமாக, 'நிர்பயா' நிதியில் இருந்து, 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதியில், 436 ரயில்வே நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இன்னும், 547 ரயில்வே ஸ்டேஷன்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டியுள்ளது. மேலும் நிர்பயா நிதியின் கீழ், இந்த ஆண்டுக்கான நிதி வழங்கப்படாததால், இந்திய ரயில்வே நிதி கழகத்தின் மூலம், கடன் பெற, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV