Surprise Me!

முதல்வர் உட்பட அனைவரையும் விசாரிக்கும் வகையில் லோக் ஆயுக்தா மசோதா

2018-07-17 0 Dailymotion

சட்டப்பேரவயில் நேற்று லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அதன் மீதான விவாதத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது மத்திய லோக்பால் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் லோக் ஆயுக்தா தலைவர் நியமனம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் எனவும் கூறினார். லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனமும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என உறுதி அளித்தார். லோக் ஆயுக்தா தலைவரை ஆளுநர் நியமிப்பார் என்றும் எத்தகைய பதவியில் இருப்பவர்களையும் லோக் ஆயுக்தா விசாரிக்க முன் அனுமதி பெற வேண்டியதில்லை என கூறினார். லோக் ஆயுக்தாவில் உள்ள அலுவலர்கள் மீதான புகாரையும் லோக் ஆயுக்தாவால் விசாரிக்க முடியும் என்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் லோக் ஆயுக்தா விசாரிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon