Surprise Me!

மாணவர்களிடையே வாரத்திற்கு ஒரு முறை புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் அரசாணை - செங்கோட்டையன்

2018-07-17 0 Dailymotion

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழாவை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், மத்திய அரசின் தேர்வுகளை எதிர்க்கொள்ளும் வகையில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது எனவும் தெரிவித்தார். புத்தக வாசிப்பு என்பது ஒருவனை கல்வியில் சிறந்தவனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் மாற்றுகிறது என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், வாரத்திற்கு ஒரு முறை அரசு மற்றும் உதவி பெரும் பள்ளிகளில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்படும் என கூறினார். மூச்சி நின்றால் மட்டும் மரணமல்ல.. முயற்சி இல்லை என்றாலும் மரணம் தான் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதனால் மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon