மும்பை நகரத்தோடு, அண்டை மாவட்டங்களான தாணே மற்றும் பால்கரிலும் கன மழையின் தாக்கம் தொடர்கிறது. சாலைகள் தெரியாத அளவிற்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தண்டவாளத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் மும்பை நோக்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. செய்வதறியாது 2 ரயில்களில் தவித்த 1500 பயணிகளை பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, மும்பையில் நாளை வரையில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கூறியுள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படையும், கடற்படை மீட்புக் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மழை நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV