நெல்லை மாவட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி நிதி மற்றும் பொது நிதியில் இருந்து மாற்றுதிறனாளிகளுக்காக பிரத்தியேக ஸ்கூட்டர் வழங்க திட்டமிடப்பட்டது. 13 மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்கள் ஒவ்வொரு பயனாளிகள் பெயரிலும் பதிவு செய்யப்பட்டும், காப்பீடு தொகை என அனைத்து நடவடிக்கையும் முடிந்தும் எவ்விதமான பயனுமின்றி நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள தனியார் வாகன ஷோருமில் வெயிலிலும் மழையிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எவ்விதமான பயனும் இல்லாமல் இருக்கும் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் வாகனம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV