சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக சேலம் மாவட்ட விவசாயிகளிடம் இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்தநிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட குப்பனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் திடீரென்று வெளிநடப்பு செய்தனர். அப்போது பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு விவசாயிகளையும் தனித்தனியாக அழைத்து கைதிகள் போல் விசாரணை நடத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி பொதுவாக கேட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV