இந்திய வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் வாதங்களை எடுத்துவைப்பதற்கான இறுதி நாளாக வரும் 31-ந் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இதனை தொடர்ந்து மேல்முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து செப்டம்பர் தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற 'பார்முலா ஒன்' கார் பந்தயத்துக்கு வந்த மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தான் எப்போதும் இங்கிலாந்து வாழ் இந்தியர்தான் என்று கூறினார். மேலும் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தன்னை திரும்ப அழைத்து சென்று, அதன்மூலம் வாக்குகளை பெறலாம் என்பதற்காகவே இந்தியா கொண்டு செல்ல விரும்புகின்றனர் எனவும் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV