ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புஷ்னபுள்ளம் கிராமத்தை சேர்ந்த நாகமணி என்பவர், தனது 3 வயது மகனை, அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போது குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி மைய நிர்வாகி குமாரி, குழந்தையின் வாயில் மிளகாய் பொடி வைத்து சத்தம் வெளியே கேட்காமல் இருக்க வாயில் துணியை அடைத்து வைத்துள்ளார். பின்னர் அங்கன்வாடி மையத்தில் இருந்து குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளது. அப்போது அந்த குழந்தை அழுதுக்கொண்டே நடந்தவைகளை அம்மாவிடம் சொல்லியுள்ளது. இதனையடுத்து பெற்றோர் காவல் நிலையம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அங்கன்வாடி மையத்தின் நிர்வாகி குமாரி மற்றும் உதவியாளரை சஸ்பெண்ட் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV