காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மாவட்டம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக உயர்ந்து வருகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 45 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV