மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் மொழி மாற்றம் செய்து கேட்கப்பட்ட கேள்விகளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு விட்ட நிலையில் சில மாநிலங்கள் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்டன. சில மாநிலங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழில் நீட் தேர்வு எழுதிய சுமார் 24 ஆயிரத்து 700 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு இருப்பது சி.பி.எஸ்.இ. அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்னர். அப்போது சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுகுவது என்று விவாதித்து முடிவுகள் எடுத்துள்ளனர். அதன்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யவுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV