Surprise Me!

வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்த வனத்துறையிடம் திட்டம் இல்லை - அதுல்ய மிஸ்ரா

2018-07-17 0 Dailymotion

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் 11ம் தேதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. அப்போது மலையேற்றப் பகுதியில் பயிற்சியில் இருந்த ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். காட்டுத் தீயில் 23 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வருவாய்த் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் ஒருநபர் குழு கடந்த மார்ச்13-இல் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பலரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை, இன்று விசாரணை ஆணையர் அதுல்ய மிஸ்ரா இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 125 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்பித்தார். அதில் எதிர்காலத்தில் மலையேற்றம் செய்வர்களுக்கும், வனத்துறைக்கும் ஒருசில அறிவுரைகள் அறிக்கை வாயிலாக அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளா. வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்தவும், முறையான நடவடிக்கை எடுக்கவும் வனத்துறையிடம் திட்டம் இல்லை
என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon