தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV