மதுரை துவரிமான் கண்மாய் தூர்வாரும் பணியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிமராமத்துப் பணிகள் மூலம் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டு தற்போது மிகச்சிறப்பான முறையில் தண்ணீர் தேக்கப்பட்டு வருவதாகவும், அதேபோன்று வைகை அணையும் தூர்வாரப்படுவதற்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படும் என்றார். முதலமைச்சர் பழனிச்சாமி, விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், தமிழக விவசாயிகள் மீது கூடுதல் அக்கறையுடன் குடிமராமத்துப் பணிகளை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். ஊழல் மிகுந்த மாநிலம் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, யார் ஊழல்வாதிகள் என்று மக்களுக்குத் தெரியும் என்றும் மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்பதால் தேர்ந்தெடுக்கக்கூடிய மக்களே இதனைத் தீர்மானிப்பார்கள் என்று கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV