பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும், அடுத்தடுத்த இடங்களில் சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், உலக வங்கி புள்ளி விவரம் குறித்து, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக்கில், கிராமப்புற இந்தியாவுக்கு முழக்கங்களை தந்தது காங்கிரஸ், வளங்களை தந்தவர் பிரதமர் மோடி' என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். உலகின் 6 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உலக வங்கி புள்ளி விவரம் தெரிவித்துள்ளது என்றும், கடந்த 4 ஆண்டாக வேகமான பொருளாதார வளர்ச்சி காணும் இந்தியா, அடுத்த ஆண்டிலும் அதன் பலனை கண்கூடாக பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டில் இந்தியா, இங்கிலாந்தை முந்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 5வது இடத்தை பிடிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV