கோவை நரசிபுரத்தில் செயல்பட்டு வரும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் லோகஸ்வரி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்த போது, இரண்டாவது மாடியில் இருந்து லோகஸ்வரியை குதிக்க சொல்லி பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளியுள்ளார். அப்போது நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த ஸ்லாப் மேலே விழுந்த லோகேஸ்வரி பலத்த அடிப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கோவை கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆறுமுகம் தங்களிடம் அங்கீகாரம் பெற்றவர் இல்லை என்று, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. போலி சான்றிதழ்கள் மூலம் ஆறுமுகம் கல்லூரியில் பணிக்கு சேர்ந்துள்ளார் என்றும், மாணவி உயிரிழப்புக்கு பயிற்சியாளர் ஆறுமுகமே முழு காரணம் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் ஆறுமுகத்தை பணிக்கு சேர்த்த கல்லூரி மீது என்ன நடவடிக்கை என்பதே கேள்வி குறியாகியுள்ளது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான கலைமகள் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக தம்பிதுரையின் மனைவி பானுமதி பதவி வகித்து வருகிறார். தேர்தலின் போது தம்பிதுரை தாக்கல் செய்த சொத்துவிவரம் பட்டியலில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV