பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சோழன் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் ஆசிரியர் திட்டியதாக கூறி, ரகு என்ற 10 ஆம் வகுப்பு மாணவன், பள்ளிக் கட்டிடத்தின் மீது ஏறி கிழே குதித்துள்ளான். இதில் பலத்த படுகாயமடைந்த மாணவனுக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கண்டிப்பு என்ற பெயரில் மாணவர்களை திட்டுவதாகவும், அடிப்பதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேப்போல் கடந்த ஆண்டு ஆசிரியை அடித்ததில் ஒரு பள்ளி மாணவி மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்கள் போன்ற விபரீத முடிவுகளை எடுக்காமல் இருக்க கவுன்சிலிங் கொடுத்து பாதுகாப்பும் வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV