நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 6 மாடி கட்டடத்துக்கு சீல் வைக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் மாநகராட்சி இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் செல்வநாதன், உதவி ஆணையர் முத்துபாண்டி ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் தரப்பில் சீல் வைக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு போலீசார் பாதுகாப்பு தரவில்லை என குற்றச்சாட்டும் எழுந்தது. அப்போது நீதிபதி வீதிமீறல் கட்டடங்களை தடுக்க தவறிய சி.எம்.டி.ஏ.வை ஏன் கலைக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். 2015 வெள்ளத்தில் இருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும், ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் பணம் பெறுவதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகின்றன என தெரிவித்தார். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதந்தது என சுட்டிக்காட்டிய நீதிபதி பெருநகர மாநகராட்சியின் புதிய பகுதிகளில் விதிமீறல்களை எப்படி தடுக்க போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர், மின் வாரிய தலைவர் ஆகியோர் ஜூலை 16-இல் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV