கர்நாடாகவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 50 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து வினாடிக்கு 46 ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து கர்நாடகா பாசனத்திற்கும், தமிழகத்திற்கும் சேர்த்து 10 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. இதில் கே.ஆர்.எஸ் அணையில் திறக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் கன அடியில் தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV