Surprise Me!

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு

2018-07-17 0 Dailymotion

பாகிஸ்தான் நாட்டில் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் கடந்த மே மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அந்த நாட்டில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், வேட்பாளர்களை கொல்ல பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பானு மற்றும் வடக்கு வசிரிஷ்தான் மாவட்ட எல்லைப்பகுதியில் பிரச்சாரக்கூட்டத்தின் அருகே இருசக்கர வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று திடீரென வெடித்தது. இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். இதனிடையே அடுத்த சில மணி நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம், மஸ்டங் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டு வெடித்தது. பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தலைவர் சிராஜ் ரைசனி உட்பட 95 பேர் இறந்தனர். குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என, அஞ்சப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon