திருவள்ளூர் மாவட்டம் சோழாவரத்தை சேர்ந்தவர் விஷால், சாந்திலால், ஹேமந்த்லால். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னைக்கு செல்ல புறப்பட்டுள்ளார். அப்போது சோழவாரம் சுங்கசாவடியை கடக்கும் போது, விஷாலின் காரை நிறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்டுள்ளனர். சோழவாரம் சுங்கசாவடியில் உள்ளூர் முக்கிய பிரமுகர்களின் கார்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது கிடையாது என்பதால், தானும் உள்ளூர்காரர் தான் என விஷால் கூறியுள்ளார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சுங்கசாவடி ஊழியர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கூலிப்படை குண்டர்கள் விஷால், ஹேமந்த்லால் ஆகியோரை சரமாரியாக தாக்கி உள்ளனர். சமரசம் செய்வது போன்று வந்த அரசியல் பிரமுகர் ஒருவர், வண்டியை சுங்கசாவடியை விட்டு ஓரமாக நிறுத்த சொல்லி, அறிவுரை வழங்கினார். அதனை ஏற்று விஷால், காரை ஓரமாக நிறுத்தி சமாதானம் பேசிக்கொண்டிருந்த போது, சுங்கச்சாவடி பணியில் இருந்த குண்டர்கள் விஷால் மற்றும் பிரேம் குமாரை கடுமையாக தாக்கி, ஓடும் பேருந்துக்குள் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழே விழுந்த விஷால் அதிர்ஷ்டவசமாக பேருந்து சக்கரத்தில் சிக்காமல் உயிர் தப்பினார். ஆனாலும் பிரேமை விடாமல் துரத்தி துரத்தி அடித்தனர். இவ்வளவு சம்பவமும் அங்கு காவலுக்கு இருந்த உதவி ஆய்வாளர் ஒருவர் முன்னிலையில் நடந்தது. இதையடுத்து விஷால் அளித்த புகாரின் பேரில் சுங்கச்சாவடி குண்டர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நீதிமன்றம் பலமுறை எச்சரித்த பின்னரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல், சுங்கசாவடிகளில் குண்டர்கள் பணி அமர்த்தப்படுவது தொடர்கிறது..! பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்..!

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV