கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை கலைமகள் கல்லூரி
மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது எதிர்பாராத செயல் என்றும், மாணவியை வற்புறுத்தி தள்ளி விட்டது மோசமன செயல் எனவும் கண்டனம் தெரிவித்தார். இது போன்ற கடுமையான செயல்களை செய்யக்கூடாது என தெரிவித்த அவர், இதுபோல பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் விருப்பப்பட்டு பயிற்சி மேற்கொள்கிறார்களா என பார்க்க வேண்டும் என்றார். கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, காவல்துறை விசாரித்து வருவதாகவும், யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV