இந்தியா-சீன எல்லை பிரச்னையால் இருநாடுகள் இடையே சுமூக உறவு இல்லை. கடந்தாண்டு டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் தங்களது வீரர்களை குவித்தது. இந்தியாவும் அதிகளவில் அங்கு வீரர்களை நிறுத்தியது. இருநாடுகள் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையில் சுமார் 75 நாட்களுக்கு பிறகு இருதரப்பில் இருந்தும் படைகள் வாபஸ் பெறப்பட்டன. எனினும், அங்கு தற்போதும் அசாதாரண சூழலே நிலவுகிறது. இந்நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தியா-சீன எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அடுத்த மாதம் 2வது வாரம் சீனா செல்கின்றனர். ராணுவ கமாண்டர் அபே கிருஷ்ணா தலைமையிலான குழுவினர் சீனா சென்று அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV