சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, மாநிலங்களின் உரிமையை பரிப்பதில் மத்திய அரசு முனைந்து செயல்படுகிறது என்றும், மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் செயல்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். யூஜிசிக்கு மாற்றாக, தேசிய உயர்கல்வி ஆணையமாக மாற்றுவது மாநில உரிமையை பறிப்பது ஆகும். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு அங்கமாக உள்ளது என்றும், எனவே காங்கிரஸ் தலைமையிலான 3-வது கூட்டணிக்கு இடமில்லை என்றும் கூறினார். கிரண்பேடி அதிகாரத்திற்கு மீறி தொடர்ந்து செயல்படுவதால் தான் திட்டங்கள் தாமதமாகிறது என்று அவர் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV