கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலை கடந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆறு வெள்ளம் போல் காட்சியளிகிறது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் வசிக்கும் மக்களை அதிகாரிகள் நேரடியாக சந்தித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். அப்புறப்படுத்தப்படும் கரையோர மக்களை அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து 6 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV