உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முந்தைய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வளர்ச்சித் திட்டங்கள் வேகமெடுத்திருப்பதாகவும், அதன் பலனை மக்கள் நேரடியாக பார்த்து வருவதாகவும் பிரதமர் கூறினார். விவசாயிகளுக்காக தற்போது முதலைக் கண்ணீர் வடிப்போர், ஆட்சியில் இருந்தபோது பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பாசனத்திட்டங்களை நிறைவேற்றாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV