21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம்14-ந் தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் மாஸ்கோ நகரில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்நிலையில் இறுதி ஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது. பிரான்ஸ் அணி கோல் மழை பொழிய குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி "சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.சாம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV