வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சென்னை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று காலை 7 மணியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரசு ஒப்பந்ததாரர் செய்யாத்துரை என்பவரது சென்னை வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் செய்யாத்துரையின் உறவினர் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தீபக் என்பவரது காரில் இருந்து 28 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், செய்யாத்துரையின் உறவினர் சென்னை சேத்துப்பட்டுவில் ஜோஸ் என்பவர் வீட்டில் இருந்து 81 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே இந்த வருமான வரித்துறை சோதனையில் 163 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 101 கிலோ தங்கம் மற்றும் 40-க்கும் மேற்பட்ட பெண்டிரைவுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV