ஜார்கண்ட் ஹசாரிபாக்கில் வசித்து வந்த நரேஷ் என்பவர் தாய், தந்தை, மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நரேஷ் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் இருவர் தூக்கில் தொங்கியும், மற்ற இருவர் தொண்டை அறுக்கப்பட்டும், பெண் குழந்தை விஷம் கொடுக்கப்பட்டும். ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், குடும்பத்தில் ஏற்பட்ட பெருகிவரும் கடன் சுமைகள் காரணமாக அனைவரும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆறாவது நபரான சிறுவனை மாடியிலிருந்து தள்ளிவிட்டது தெரிய வந்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV