நியூட்ரினோ ஆய்வுகள் மக்களுக்கு ஒருபோதும் எதிரானவை அல்ல என்று விஞ்ஞானி விவேக் ததார் கூறினார். <br />மதுரை மாவட்டம் வடபழஞ்சி நியூட்ரினோ ஆய்வு மைய அலுவலகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நியூட்ரினோ ஆய்வு மையத்தின் திட்ட இயக்குநர் விவேக் ததார், 'நியூட்ரினோ உணர் கருவியின் தொடக்க நிலைக் கருவி ஒன்றை, வடபழஞ்சி ஆய்வு மையத்தில் அமைத்துள்ளோம். இக்கருவி முழுவதும் உள்ளூர் தொழில்நுட்பத்திலும், இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்றதுடன் நியூட்ரினோ ஆய்வுப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகும் என்றார். நியூட்ரினோ ஆய்வில் ஒரு மரம் கூட வெட்டப்படாது யாருடைய நிலமும் கையப்படுத்தப்படாது என்றதுடன் 66 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில்தான் இது அமைகிறது என்று கூறினார். <br /> <br />Scientist Vivek Dadar said that neutrino studies are never anti-people.