மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் இன்று காலை 02:00 மணியளவில் உயிரிழந்தார்.இவர் 1 வருடம் மேலாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.<br /><br />ஏ.கே.போஸ் 2006 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பின் 2011 - ஆம் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன் பின் 2016-ஆம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடை தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.இதுவரை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1972 -ல் அதிமுகவில் இணைந்து கட்சி பணி தொடங்கினார்.கடந்த 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருபரங்குன்றம் தொகுதியிலும் , 2011ல் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுயிலும் அதிமுக சார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.<br /><br />மேலும் கடந்த 2016ல் நடை பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சீனி வேலின் திடீர் மரணத்திற்கு பின் மீண்டும் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் Dr. சாவணை விட 41, ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்து போது வேட்பாளராக A. K. போஸை அறிவித்த கடிதத்தில் கையெழுத்து விற்கு பதில் கைநாட்டு வைத்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
