முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி நாட்டுக்கு ஆற்றிய பணியை மறக்க முடியாது என்று கூறினார்.

கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு 6 வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Former Prime Minister Devegowda visits Kauvery Hospital and he says that Can not forget Karunanidhi’s services.