வன விலங்கை வேட்டையாட வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்ததில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். <br /> <br />குடியாத்தம் பகுதியை அடுத்த ராமாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது வீட்டின் அருகில் லதா என்பவரின் வீடு உள்ளது. அப்பகுதியில் கேபிள் கனெக்க்ஷன் தொழில் செய்துவரும் லதா கேபிள் ஒயர்களை சரிபார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது முருகேசனின் வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் லதா பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட வழக்கு பதிவு செய்த போலீசார் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தது குறித்து முருகேசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தாக முருகேசன் போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.