Surprise Me!

வெற்றிடத்தை பாமக நிரப்பும் ராமதாஸ் பேட்டி- வீடியோ

2018-08-21 464 Dailymotion

வாலாஜா பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மகளிர் பொதுகூட்டம் நடைபெற்றது. பாமக மாநில தலைவர் ஜி.கே மணி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது நிறுவனர் ராமதாஸ் பேசுகையில் பாலாறு மிகவும் தூய்மையான ஆறாக இருந்தது, அதில் தண்ணீர் சென்றால் குடிக்கும் அளவுக்கு இருந்தது ஆனால் இங்குள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர் பாலாற்றில் விடப்பட்டதால் அது பாழ்பட்டு மாசடைந்து போனது என்றார். மேலும் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக இரண்டு பெரிய தலைவர்கள் இருந்தார்கள். அவர்களை பார்த்து இவ்வளவு நாள் அதற்காக ஓட்டு போட்டீர்கள், தற்போது இரண்டு தலைவர்களும் மறைந்துவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாமக தான் நிரப்பும் என்றதுடன் மகளீரான நீங்களும் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும், அப்படி வாக்களித்தால் தான் தமிழகத்தை மதுவில்லாத தமிழகமாக மாற்ற முடியும் என்று கூறினார். <br /> <br />Des: Women's Committee was held on the 30th anniversary of the Proletarian People's Party at Walajja bus stand.

Buy Now on CodeCanyon