Surprise Me!

வடகொரியா அணு ஆயுதங்களை ஒழிப்பது உறுதியானால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் - அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

2018-08-29 5 Dailymotion

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அனின் சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்நிலையில், அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்ப்பிடம் உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது. இருப்பினும், வடகொரியா அரசு தற்போதும் அணு ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், அணு ஆயுதங்களை அழிப்பது உறுதியானால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். <br /><br />

Buy Now on CodeCanyon