Surprise Me!

கிருஷ்ணகிரி அருகே அடுத்ததடுத்த 3 வீடுகளில் தீவிபத்து; வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகின

2018-09-01 7 Dailymotion

கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தில் ஞானசவுந்திரியா என்பவரது வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர், இருப்பினும் காற்று வேகாமாக வீசியதால் அருகில் இருந்த 2 வீடுகளுக்கும் தீ பரவியது. பின்னர் நீண்ட நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தால் வீட்டில் இருந்த பணம், பொருட்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகின. மேலும் இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Buy Now on CodeCanyon