Surprise Me!

மீடூ சில நேரம் தவறுதலாக பயன்படுகிறது ! அமைச்சர் கடம்பூர் ராஜு

2018-10-17 159 Dailymotion

மீடூ சில நேரம் தவறுதலாக பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதால் அது குறித்து ஆராய வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்<br /><br />தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் 219ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் மீடூ பிரச்சினை என்பது நாடு முழுவதும் எழுந்துள்ளது, சில நேரம் அது தவறுதலாக பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதால் ஆராய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, மத்தியஅரசு சட்டம் இயற்றினால், அதன் வழியாக தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என்றார்<br /><br />தமிழக அரசு யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்கவில்லை, ஜல்லிக்கட்டு, ஜிஎஸ்டி, காவிரி என மாநில உரிமைகளை இந்த அரசு மீட்டெடுத்துள்ளது, என்றார்.

Buy Now on CodeCanyon