பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் மலைக்கோயில் வருகை தரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்த்து துணிபைகளை பயன்படுத்துமாறு கூறி பக்தர்களுக்கு இலவசமாக துணி பைகளை வழங்கினார்கள்.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் வினய் அறிவுரையின்படி பழனி தண்டாயுதபாணி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படியும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடைபெற்றது. பழநிகோவில் இணைஆணையர் சீசெல்வராஜ்
தலைமையில் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் பழநி வரும் பிளாஸ்டிக் கேரிபேக்களை தவிர்த்து பக்தர்களுக்கு துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தார்.
பழநி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கேரிபேக்கில் தேங்காய். பழம். பூ.பத்தி. சூடம்.பால் என வைத்துக்கொண்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

des: Devotees visiting the hill temple on behalf of the Palani Thandayuthapani Temple offered free cloth bags to the devotees by using plastic cloth bags and using cloth bags.