2 பஞ்சாலைத் தொழிலாளர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு தலையில் முக்காடிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுச்சேரியில் சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலை தொழிலாளர்கள் மூன்று மாதம் சம்பளத்தை வழங்காததை கண்டித்து இன்று தலைமை தபால் நிலையம் முன்பு தலையில் முக்காடிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். புதுவையில் பெரும்பாலும் அரசு நிறுவனங்கள் அரசு சார்ந்த தொழிற்சாலைகளுக்கும் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கு முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகாரப் போட்டியில் பாதிக்கப்படுவது பொதுமக்களும் அரசு ஊழியர்களும் தான்.பொதுமக்கள் நலன் கருதி ஆளும் அரசும்,ஆளுநரும் ஒன்றிணைந்து மக்களின் வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர வஞ்சிக்க இல்லை. மேலும் நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தலைமை தபால் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர் இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Des: 2 Panchali workers head office in front of the forehead in the head of the darna struggle