Surprise Me!

பாலாற்றில் கழிவுநீர்.. அதிகாரி திடீர் ஆய்வு- வீடியோ

2018-12-03 752 Dailymotion

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டாரத்தில் சுமார் 133 தோல் பதனிடம் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்ச்சாலைகளில் இருந்து வெளியேறும் தோல் கழிவு நீர் வாணியம்பாடி தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் சேகரித்து அவற்றை சுத்தரிகரிக்கப்பட்டு மீண்டும் அதனை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கச்சேரி சாலையில் உள்ள சில தனியார் தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீரை இரவு நேரத்தில் பாலாற்றில் வெளியேற்றுவதாக பகுதிமக்கள் மாசு கட்டுபாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் குடிநீர் மாசு அடைந்துள்ளாதாகவும், விவசாயம் செய்ய முடியவில்லை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளதாக புகார் கூறி உள்ளனர்.இதன் அடிப்படையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை பொறியாளர் சந்திரசேகரன் கச்சேரிசாலை பின்புறம் உள்ள பாலாற்று பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவுநீர் குளம் போல் தேங்கி இருப்பது கண்டுபிடித்தார். பிறகு 2 கேன்களில் கழிவு நீரை ஆய்வுக்காக எடுத்து சென்றார். மேலும் இது சம்மந்தமாக ஆய்வுகள் மேற்கொண்டு சமந்தப்பட்ட தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்<br /><br /><br />des:Wastewater in the balcony.

Buy Now on CodeCanyon