டாக்டர், எஞ்சினியர், விஞ்ஞானி, நீதிபதிகளை உருவாக்கும்போதே ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் நேர்மையினையும் சேர்த்தே உருவாக்க வேண்டும் சகாயம் ஐஏஎஸ் ஆசிரியர்களுக்கு அறிவுரை<br /><br />தேனியில் தனியார் மண்டபத்தில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தேனி திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் செந்தில்குமார் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த சகாயம் ஐஏஎஸ் பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பேசுகையில், ஒரு ஆசிரியர் தான் ஒவ்வொருவருக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாக திகழ்வார். எனவே ஆசிரிய பெருமக்கள் மாணவர்களுக்கு தமிழ், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை கற்பிக்கும் போது, அவர்களிடத்தில் நேர்மையினையும் சேர்த்து கற்பிக்க வேண்டுகிறேன். நேர்மைக்கு என்றுமே மதிப்புள்ளது, உதாரணமாக நேர்மையாக செயல்பட்ட காரணத்தினாலேயே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜிக்கு ஓய்வு பெற்ற பின்பும் ஓராண்டு பணி நீடிப்பு கிடைத்துள்ளது. எனவே நேர்மையாக வாழ்வது தான் கடினம், ஆனால் அதற்குரிய மரியாதை என்றுமே கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை என்று பேசினார்.<br /><br />Des: Doctor, Engineer, Scientist, Advocates Advice to IAS Teachers to Create Authenticity to Students
