எண்ணூர் சுனாமி குடியிருப்பில் தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது<br /><br />சென்னை திருவொற்றியூர் அருகே எண்ணூர் சுனாமி குடியிருப்பு 17வது பிளாக்கில் வசித்து வருபவர் எபனேசர் (வயது 25)மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இவரது மனைவி சுதா இவர்களுக்கு ரெவின்ஸ்டன் என்ற 4 மாத ஆண் குழந்தை இருந்தது. இரவு 12 மணியளவில் சுதா குழந்தைக்கு பால் ஊட்டி விட்டு தூக்க கலக்கத்தில் அப்படியே அயர்ந்து தூங்கி விட்டார்.குழந்தை அவருடன் தரையில் படுத்து இருந்தது. காலை 9மணியளவில் எழுந்து பார்த்த போது குழந்தை அசைவற்ற கிடந்தது. தூக்கி பார்த்த போது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து அதை எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தது. உடனே குழந்தையை தூக்கி கொண்டு திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை பால் குடிக்கும்போது மூச்சு திணறி இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் குழந்தையின் உடலில் விஷம் எதாவது கலந்து உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.<br /><br />DES: The death of a child in a tsunami settlement in the Ennore tsunami has caused a tragedy