ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ், வேன் திருப்பரங்குன்றம் அருகே நேருக்கு நேர் மோதிகொண்டதில் 4 பேர் படுகாயம்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மூலக்கரை என்றஇடத்தில் ஐயப்ப பகத்தர்களை ஏத்தி வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேனும்,ஆந்திர மாநிலம் குடியாத்தம் பகுதியை பஸ் -ம் நேர்க்கு நேர் மோதி கொண்டதில் 4பேர்களுக்கு படுகாயம் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம்.வேனை ஓட்டி வந்த பாலமுருகன் என்பவருக்கு காலில் பலத்த காயம்ஏற்பட்டுள்ளது. மற்றும் வேனில் பயணம் செய்த தங்கதுரை, நடராஜன், செல்வம்

ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.பஸ்ஸில் வந்தவர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் காயம் பட்டோருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்

DES: Bus van face 4 injured