திருவாரூர் இடைத்தேர்தலில்
நடிகர் உதயநிதி போட்டியிட
ரசிகர்கள் அறிவாலயத்தில்
விண்ணப்பம் கொடுத்தனர்.

உதயநிதி பிறந்த ஆண்டு
கட்சியில் சேர்ந்த ஆண்டு
இரண்டுமே 1977 என குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியில் சேர்ந்த வருடம் தெரியாமல்
அப்படி குறிப்பிட்டீர்களா என கேட்டதற்கு
பிறந்த உடனே கட்சி பணி செய்யக்கூடாதா?
என்று திருப்பி கேட்டார் ஒரு ரசிகர்.

இதற்கு நடுவில், திமுக தலைவர் ஸ்டாலினை
திருவாரூரில் களம் இறக்க ஒரு கோஷ்டி
தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அவர்களை பின்னணியில் இருந்து இயக்குவது
அழகிரி என்ற பேச்சு வலம் வருகிறது.

அது குறித்து மதுரையில் விசாரித்தபோது
அண்ணனை திருவாரூரில் போட்டியிடுமாறு
பா ஜனதா மேலிடமே வலியுறுத்துகிறது;
அவர் எப்படி திமுக விவகாரத்தில் தலையிடுவார்?
என்று கேட்டார் ஒரு உடன்பிறப்பு.