திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளியின் சார்பில் பொங்கல் விழா திருவள்ளுவர் தினம் மற்றும் விவேகானந்தர் ஜெயந்தி விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.முன்னதாக ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் உழவர்களின் பெருமிதத்தை போற்றும் வகையில் மண்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.பானையில் பொங்கல் பொங்கி வரும்போது ஆசிரியர்களும் மாணவர்களும் பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வண்ண வண்ண ஆடைகள் உடுத்தி கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சுவாமிநாதன், பள்ளியின் தலைமையாசிரியர் சிவகாமி, மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.<br /><br /> <br />des : Students who appreciated the Pongal farmers
