ஏ டி எம் மில் ஏமாற்றிய ஆசாமியை
17 நாட்கள் காத்திருந்து பிடித்திருக்கிறார் ஒரு மும்பய் பெண்.
ரெஹானா ஷேக் என்ற பெண்
பாந்த்ராவில் உள்ள ஏ டி எம் மில்
பணம் எடுக்க சென்றார்.
ஏதோ காரணத்தால் பணம் வரவில்லை.
வெளியே நின்ற ஆசாமி உதவிக்கு வந்தான்.
என்னென்னவோ செய்தும் பணம் வரவில்லை.
ரெஹானாவும் கிளம்பி விட்டார்.
வீட்டுக்கு போனதும் மெசேஜ் வந்தது,
உங்கள் கணக்கில் பத்தாயிரம் எடுத்திருக்கிறீர்கள் என்று.

பேங்கில் புகார் செய்தார். போலீசுக்கு போனார்.
எதுவும் பலன் இல்லை. உன் அஜாக்ரதை என்று கேலி செய்தனர்.
ரெஹானா பார்த்தார்.
யாரையும் நம்பி பிரயோசனம் இல்லைனு முடிவு கட்டி
டெய்லி அந்த ஏ டி எம் முக்கு போய் நிக்க ஆரமிச்சார்.
மணிக்கணக்குல காத்திருப்பார், ஆசாமி வரானான்னு பாக்க.

ஒருவழியா 18 நாலைக்கு அப்றம் வந்தான்.
ரஹானா பிடியில் சிக்கினான்.
விசாரிச்சப்ப தெரிஞ்சுது, இதே மாதிரி
மும்பைல மட்டும் 17 ஏ டி எம் ல அவன்
ஆட்டய போட்ருக்காங்றது.

சென்னை போலீஸ் எவ்ளவோ பரவால்ல.