ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் தீப்பந்தம் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கிராமத்தில் இருந்து நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 244 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்சியினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் கோமல் என்ற இடத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க குழாய் பதித்தால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் விவசாயம் அளிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாகும். இதனால் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை டெல்டா மாவட்டங்களில் தடை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.அதேநேரத்தில் விவசாயிகளின் அனுமதியின்றி விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்து வருகிறது. அதனால் உடனடியாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

DES : Farmers protest against Hydro carbon project.