Surprise Me!

7 மணி நேரம் பரத நாட்டியம் ஆடிய மாணவி.. இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்டு சாதனை- வீடியோ

2019-03-16 471 Dailymotion

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 9 வகுப்பு மாணவி கிரண் அக்க்ஷயா, கடந்த 7 வருடகாலமாக பரத நாட்டியம் பயின்று வருகிறார். இவர், பரத நாட்டியத்தில் புதிய உலக சாதனைமுயற்சியாக தொடர்ந்து 7 மணி நேரத்திற்கு மேல் தனி நபர் பிரிவில் பரதம் நாட்டியமாடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை ஹாலில் நடைப்பெற்ற இந்த சாதனைமுயற்சியில் புஷ்பாஞ்சலி, அலாரிப்பு,சஜித்ஸ்வரம், சடாச்சரம், மீனாட்சி சப்தம், நவரசவர்ணம், விசம காரகண்ணன் , அற்புத சிப்பியடி, ஓம் நம நாரயணா, தில்லானா உள்ளிட்ட பல்வேறுதாளங்களில், ராகங்களுக்கு ஏற்ப நடனம் ஆடினார். மேலும் பிள்ளையார், முருகன், சிவபெருமான், நடராஜர், கிருஷ்ணர் பற்றிய பாடல்களுக்கும், பாரதியாரின் வரிகளுக்கும் ஏற்ப முகப்பாவனைகள் அமைந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

இதனை தொடர்ந்து மாணவி கிரண் அக்க்ஷயாவுக்கு நடுவர் விவேக் ராஜா பாராட்டி இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்டு சாதனை சான்றிதழை வழங்கினார்.

DES : India Book of Records Recognition for 7 hours

Buy Now on CodeCanyon