திருச்சியில் தேர்தல் அலுவலரிடம் சுயேட்சை வேட்பாளர் இரண்டு பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.<br /><br />திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின கண்காணிப்பாளர்களாக அனுப்குமார் வர்மா, சுதிர் கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்து தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் செலவின கண்காணிப்பாளர்கள் அனுப்குமார் வர்மா, சுதிர் கவுதம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊடக மையத்தை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில்,திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சிவராசனிடம் வீர முத்தரையர் சங்கத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் கருப்பையா சுயேட்சையாக முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதேபோல அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் சாதிக்பாட்சா வேட்புமனு தாக்கல் செய்தார்.
