மற்ற கட்சிகள் பணத்தை முன்வைத்து போட்டியிடும்போது நாம் தமிழர் கட்சி இனத்தை நம்பி தேர்தலை சந்திக்கிறது என்று தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் தஞ்சை சட்டமன்ற வேட்பாளர் கார்த்தி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் போட்டியிடும் மற்ற கட்சிகள் பணத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சி இனத்தை நம்பி தேர்தலை சந்திக்கிறது என்று தெரிவித்தார். காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி அவர்களால் ஓட்டு கேட்க முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர் அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க நாம் தமிழர் கட்சியால் தான் முடியும் என்று தெரிவித்தார். மேலும், சேலத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது நாம் தமிழர் கட்சி தான் என்று தெரிவித்த அவர், தமிழகத்தை நாசகரமாக்கும் திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி அரசு என்று குற்றம்சாட்டினார்.<br /> To protect the country we're cheating on the tongue