தேனி மாவட்டத்தில் பரவலாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஜா புயலால் கனமழை பெய்தது. இதனால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்;தது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பால் அணை தனது முழு கொள்ளளவான 57 அடியை எட்டியது. இந்நிலையில் கடந்த சில நாட்டகளாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியில் மழையின்மையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வத்து படிபடிப்படியாக குறைந்து தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் 36.50 அடியாக சரிய தொடங்கியது. இந்நிலையில்; தற்ப்போது அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையின் நீர் இருப்பு 142.66 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை, மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் மழை இல்லாததால் மேலும் அணையின் நீர் மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்படும் அபாயம் உள்ளது.<br /><br />des : Due to lack of water due to heavy rainfall, the water level of the dam is reduced to 36 feet. The risk of drinking water shortage
